/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓவியத் திறனை நிரூபித்த மாற்றுத்திறன் மாணவர்கள்
/
ஓவியத் திறனை நிரூபித்த மாற்றுத்திறன் மாணவர்கள்
ADDED : நவ 25, 2025 05:44 AM
- நமது நிருபர் -
ஒவ்வொரு ஆண்டும், டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது; அந்நாளில், மாற்றுத்தினாளிகள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான இயக்கம் நடத்தப்படுவது வழக்கம்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும், மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அறிவு சார் இயக்க குறைபாடு, வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காத குறைபாடு, கை -கால் இயக்க குறைபாடு மற்றும் பார்வை குறைபாடு உள்ள மாணவ, மாணவியர் என, பிரிவினருக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக, 10 வயது வரையுள்ள மாணவ, மாணவியர், 11 முதல், 17 வயது வரையுள்ளோர் பிரிவு, 18 வயது என, பிரிவு என, மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

