/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாஸ்போர்ட் கேந்திர அலுவலகம் திறப்பு; நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது
/
பாஸ்போர்ட் கேந்திர அலுவலகம் திறப்பு; நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது
பாஸ்போர்ட் கேந்திர அலுவலகம் திறப்பு; நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது
பாஸ்போர்ட் கேந்திர அலுவலகம் திறப்பு; நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது
ADDED : ஜன 24, 2025 11:42 PM

திருப்பூர்; திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதன்மை பாஸ்போர்ட் அலுவலர் சீனிவாசா தலைமை வகித்தார், தபால்துறை மேற்கு மண்டல தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.பி., சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாஸ்போர்ட் அலுவலகத்தை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். எம்.பி., சுப்பராயன், அமைச்சர் கயல்விழி குத்துவிளக்கேற்றினார். முன்னதாக, கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் வரவேற்றார்.
மத்திய அரசின், 'பாஸ்போர்ட் சேவா திட்டம்' தலைமை பாஸ்போர்ட் அதிகாரி ஸ்ரீனிவாசா கூறியதாவது:
வெளியுறவு அமைச்சகம், தபால் துறையுடன் இணைந்து, நாட்டில், 444வது பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி., தொகுதியிலும் ஒரு அலுவலகம் என்ற அடிப்படையில், திருப்பூருக்கு இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. இனி கோவை பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. விண்ணப்பதாரரின் அனைத்து கோரிக்கைகளும் இங்கே பதில் கிடைக்கும். பொள்ளாச்சியிலும் விரைவில் பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகம் திறக்கப்படும். அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா வலைத்தளமான www.passportindia.gov.in இல் கூடுதல் விபரங்களை பயனாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு, ஸ்ரீனிவாசா கூறிகினார்.
திருப்பூரில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், ஆன்லைனில் முன்கூட்டியே விண்ணப்பித்து, பதிவு செய்திருந்த மேயர் தினேஷ்குமாருக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல் ஆளாக தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொண்டார். தினமும், 40 பேர் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். தபால் அலுவலகம் செயல்படும் அனைத்து நாட்களிலும் பாஸ்போர்ட் அலுவலகமும் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.