/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர், பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் அலுவலகம்
/
திருப்பூர், பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் அலுவலகம்
ADDED : டிச 17, 2024 05:43 AM

திருப்பூர்; திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் துவங்கப்படுகிறது.
மேற்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், குன்னுார் (நீலகிரி) உள்பட தமிழகத்தில், 39 பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்கள் உள்ளன. திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் மற்றும் பொள்ளாச்சி, ஆழியார் தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகம் துவங்க பூர்வாங்க பணிகள், கருவி கள் நிறுவும் பணி, 2025 ஜனவரியில் துவங்க உள்ளது.
தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தபால் நிலையங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவை தொடர மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தபால்துறை ஐந்து ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளது. திருப்பூர், பொள்ளாச்சி ஆழியாரில் 2025 மார்ச் மாதம் முன்பு அலுவலகம் திறக்கப்படும். பாஸ்போர்ட் முன்பதிவு, விண்ணப்பத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்,' என்றனர்.