/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதைகுப்பிச்சிபாளையம் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
பாதைகுப்பிச்சிபாளையம் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
பாதைகுப்பிச்சிபாளையம் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
பாதைகுப்பிச்சிபாளையம் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : ஏப் 18, 2025 11:38 PM

பொங்கலுார்: திருப்பூர் அடுத்த உகாயனுார் ஊராட்சி, பாதைகுப்பிச்சிபாளையம் விநாயகர், மாகாளியம்மன், பட்டத்தரசி அம்மன், மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி துவங்கியது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாலிகை, தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, முதற்கால யாக வேள்வி, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், இரண்டாம் கால யாக வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது.
சண்முகசுந்தரம், சம்பத்குமார் தலைமையிலான வள்ளி கும்மியாட்டம், வாவிபாளையம் ஆனந்த கிருஷ்ணனின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாக வேள்வி நடந்தது. பின், விநாயகர், மாகாளியம்மன், மாதேஸ்வரன், பட்டத்தரசி அம்மன் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர்.
ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர். அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

