ADDED : ஆக 16, 2025 12:15 AM

திருப்பூர்; திருப்பூரில் உள்ள பல்வேறு தொழில் அமைப்பினர், 79வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) வளாகத்தில் நடந்த விழாவில், தலைவர் ஈஸ்வரன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் கோவிந்தப்பன், துணை தலைவர் பாலசந்தர், இணை செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில், முன்னாள் செயலாளர் பொன்னுசாமியின் மகள் விஜி, தேசிய கொடியை, ஏற்றிவைத்தார். பொது செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி, உறுப்பினர் சேர்க்கை குழு தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூரில், 'டீமா', திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், 'நிட்மா', 'சிம்கா', டெக்பா, கம்ப்யூட்டர் அசோசியேஷன் என, அனைத்து தொழில் அமைப்புகள் அலுவலகத்தில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.