
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம் பகுதியில், எம்.ஜி.ஆர். காலனியில், 21 குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதே போல் கொங்கணகிரியில் 134 குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கின்றன.
நீண்ட காலமாக இந்த இடத்தில் வசிக்கும் இந்த குடும்பத்தினர் தங்கள் இடத்துக்கு மனைப்பட்டா கேட்டு வேண்டுகோள் விடுத்து வந்தனர். அவர்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, மனைப்பட்டாக்களை, பயனாளிகளுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் நேற்று வழங்கினார். தி.மு.க., நிர்வாகிகள், நாகராஜ், ஈஸ்வரமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் திவாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.