/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்வம் ஊட்டிய 'பட்டம்' இதழ்; ஆற்றல் உணர்ந்த மாணவர்கள்
/
ஆர்வம் ஊட்டிய 'பட்டம்' இதழ்; ஆற்றல் உணர்ந்த மாணவர்கள்
ஆர்வம் ஊட்டிய 'பட்டம்' இதழ்; ஆற்றல் உணர்ந்த மாணவர்கள்
ஆர்வம் ஊட்டிய 'பட்டம்' இதழ்; ஆற்றல் உணர்ந்த மாணவர்கள்
ADDED : டிச 03, 2024 07:03 AM

திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு புத்தக படிப்புடன் பொது அறிவு உள்ளிட்ட கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களை தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும் கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டு வினாடி - வினா விருது, 2024 -'25 போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவற்றுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது. மேலும், சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் இடையே அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்பட இருக்கிறது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
பல்லடம், நாராணபுரம், சேடபாளையம் பகுதியில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
தகுதி சுற்றுக்கான போட்டியில், 80 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், ஆங்கில அகர வரிசையில், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'டி' அணியில் இடம் பெற்ற, 11ம் வகுப்பு மாணவி வேதிகா ஸ்ரீ, 8ம் வகுப்பு மாணவி பிரிஷா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் சாவித்ரி ராஜகோபால், செயலாளர் வினோதரணி ராஜகோபால், முதல்வர் விஸ்வநாதன், தலைமையாசிரியர் மகாலட்சுமி, வினாடி -வினா ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.