/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரிகளை செலுத்துங்க; நகராட்சி அறிவிப்பு
/
வரிகளை செலுத்துங்க; நகராட்சி அறிவிப்பு
ADDED : ஜன 28, 2025 11:21 PM
உடுமலை; உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறு, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
உடுமலை நகராட்சி கமிஷனர் சரவணக் குமார் கூறியதாவது:
உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி மனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை, நகராட்சி அடையாள அட்டையுடன் தங்களது இல்லம் தேடி வரும் வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர்களிடம் உள்ள கையடக்கக் கருவி வாயிலாக செலுத்தி, உரிய ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை, உரிய காலத்தில் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் வசதிக்காக http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், வரிகளை செலுத்தி ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், உடுமலை நகராட்சி அலுவலகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரிவசூல் மையம் இயங்கும்.
பொதுமக்கள் உரிய காலத்தில், வரித்தொகைகளை செலுத்தி நகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

