/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புடலை விலை இறங்குமுகம்; விவசாயிகள் கவலை
/
புடலை விலை இறங்குமுகம்; விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 30, 2025 08:20 PM

உடுமலை; புடலை சாகுபடியில் நோய்த்தாக்குதலால் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்று பாசனத்துக்கு, விளைநிலங்களில் பந்தல் அமைத்து, புடலை, பீர்க்கன், பாகற்காய் சாகுபடி செய்கின்றனர். இவ்வகை காய்கறிகள் பெரும்பாலும், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நடப்பு சீசனில் தொடர் மழை மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், புடலை சாகுபடியில், நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, விளைசல் குறைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான, புடலை தற்போது கிலோ 16 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.