/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிகரங்கள் அறக்கட்டளை 93வது ரத்த தான முகாம்
/
சிகரங்கள் அறக்கட்டளை 93வது ரத்த தான முகாம்
ADDED : ஆக 16, 2025 09:49 PM

அவிநாசி; சிகரங்கள் அறக்கட்டளை, ஏ.கே.ஆர். அகாடமி இணைந்து 93வது ரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர்.
அணைப்புதுாரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமியில் நடந்த இம்முகாமில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு, 120 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.
தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை, திருப்பூர் பாலா எலும்பு மூட்டு மருத்துவமனை சார்பில் இலவச எலும்பு மற்றும் மூட்டு வலி பரிசோதனை, ரேவதி மெடிக்கல் சென்டரின் இலவச இருதய பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், கருணா மெடிக்கல் சென்டரின் இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மற்றும் கிஷோர் டென்டஸ்டிரியின் இலவச பல் பரிசோதனை ஆகிய முகாம்கள் நடந்தன.
பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன், பள்ளி முதல்வர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் காமாட்சி பேசினார். ஜெய்வின் இம்பெக்ஸ் நிர்வாக இயக்குனர் தங்கவேல் பழனிச்சாமி, துணை மேயர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
ரத்தக் கொடையாளர்களுக்கு அரசு மற்றும் சிகரங்கள் அறக்கட்டளையின் சான்றிதழ், பதக்கம் மற்றும் துணி பையுடன் மரக்கன்று வழங்கிகவுரவிக்கப்பட்டது.