/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் மனுக்கள்; ஆய்வு அவசியம்
/
கிடப்பில் மனுக்கள்; ஆய்வு அவசியம்
ADDED : பிப் 04, 2025 07:36 AM
பல்லடம்; பல்லடம் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மணிக்குமார் கூறியதாவது:
நில அளவை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, உதவித்தொகை, சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்படுகின்றன. வருவாய்த்துறை சார்பில் ஏராளமான மனுக்கள் மாவட்டம் முழுவதும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல்லடம், திருப்பூர் தெற்கு, தாராபுரம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில், கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., ஆகியோர் அடிக்கடி ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.
ஏழைகள் நம்பி உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிகிச்சைகளின் தரம் குறைவாக உள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில், வீட்டு வசதி, ஜல் ஜீவன், சாலை வசதி உள்ளிட்ட மக்களுக்கான மேம்பாட்டு பணிகள் பல்வேறு இடங்களில் பாதியில் நிற்கின்றன.
தனி அலுவலர்கள், உரிய ஆய்வு மேற்கொண்டு பணிகளை தெரிந்து முடித்தால் மட்டுமே பொதுமக்களின் தேவைகள் நிறைவேறும். கோரிக்கைகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் வரை புகார் அளித்தும், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் கிடப்பில் உள்ளன. கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.

