ADDED : ஜூலை 15, 2025 08:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் வரவேற்றார். கவுரவத் தலைவர் நடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ், துணை செயலாளர் சிவராஜ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.
சங்க தலைவர் மணி ஆண்டுவிழா குறித்து பேசினார். தாலுகா அலுவலகத்தில் பழுதடைந்துள்ள ஓய்வூதியர் அறையை சீரமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.