/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்குறுதி நிறைவேற்ற கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
வாக்குறுதி நிறைவேற்ற கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
வாக்குறுதி நிறைவேற்ற கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
வாக்குறுதி நிறைவேற்ற கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 05:39 AM

திருப்பூர்: ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்தது. ஓய்வூதியர்கள் 70 பேர் பங்கேற்றனர்.
முந்தைய சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், 70 வயது பூர்த்தியாகும்போது, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மருத்துவபடி வழங்கவேண்டும்.
ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது; இந்த தொகையை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.