ADDED : டிச 06, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம், தமிழ்ச் சங்கம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்த, புத்த கக் கண்காட்சி பல்லடம் மணிவேல் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. இமைகள் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரராஜ் வரவேற்றார்.
ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் தனசேகரன் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் கவிதாமணி, தமிழ்ச் சங்கத் தலைவர் கண்ணையன், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வரும் 8ம் தேதி வரை நான்கு நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

