/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சிகள் துாய்மைக்கு கைகொடுக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் உறுதி

ADDED : டிச 06, 2025 05:20 AM

திருப்பூர்: திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க (டிப்மா) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, திருப்பூர் கிளப் அரங்கில் நேற்று நடந்தது.
புதிய தலைவராக செல்வராஜ், துணை தலைவர் கதிர், செயலாளர் அருண்பிரசாத், துணை செயலாளர் ரவி, பொருளாளர் வேலு ஆகிய நிர்வாக குழுவினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் பதவியேற்றனர். முன்னாள் தலைவர் சண்முகம், கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கேன்சர் சென்டர் அமைப்பதற்கு சங்கம் சார்பில், 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் உறுப்பினராக உள்ள அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும், தங்கள் பணியாளர்களுக்கு, வாடகை இல்லாத வீடு வசதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. இதுபோன்ற சேவைகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு கைகொடுக்கும் வகையில், பிளாஸ்டிக் மறுசுழற்சியை அதிகரித்து, பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நகராக மாற்றவேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.