/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு
/
ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 30, 2025 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ராஜேந்திரா ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலையில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, வணிக கடைகள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளன.
இந்த ரோட்டில் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் இருந்து வருகின்றன. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.