/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமுதாய கூடத்தில் பேரூராட்சி அலுவலகம் விஷேசங்களை நடத்த முடியாமல் மக்கள் அவதி

ADDED : நவ 06, 2025 04:33 AM

குன்னத்தூர்: குன்னத்துார் பேரூராட்சி அலுவலகம் போதிய அடிப்படை வசதியில்லாத பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது.
பழைய கட்டத்தை அகற்றி, புதிய அலுவலகம் கட்ட ஒரு கோடியே, 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அலுவலக கட்டுமான பணி, 2024 ஆக. மாதம் துவங்கியது. ஒரு ஆண்டில் பணியை முடிக்க வேண்டும். ஆனால், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அதிகாரிகளின் மெத்தனத்தால், பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
புதிய அலுவலகம் கட்டுப்படுவதால், பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது.
அப்பகுதியினர் கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தங்க வீட்டு விஷேசங்களை செய்ய சமுதாய கூடத்தையே நம்பி உள்ளனர்.
ஆனால், சமுதாய கூடத்தை பேரூராட்சி அலுவலகத்துக்காக பயன்படுத்துவதால், வீட்டு விசே ஷங்களை அதிக செலவு செய்து, தனியார் மண்டபத்தில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பேரூராட்சி அலுவலக கட்டட பணியை விரைவாக முடித்து, சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.