/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டுவதை தடுத்த மக்கள் குண்டுக்கட்டாக கைது
/
குப்பை கொட்டுவதை தடுத்த மக்கள் குண்டுக்கட்டாக கைது
குப்பை கொட்டுவதை தடுத்த மக்கள் குண்டுக்கட்டாக கைது
குப்பை கொட்டுவதை தடுத்த மக்கள் குண்டுக்கட்டாக கைது
ADDED : அக் 25, 2025 02:10 AM

பல்லடம்: மாநகராட்சி குப்பை கொட்டுவதை தடுத்த மக்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்காளிபாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான, 9 ஏக்கர் நிலத்தில், மாநகர குப்பையை கொட்ட ஏற்பாடுகள் நேற்று துவங்கின. தகவலறிந்த விவசாயிகள், பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர் .
மக்களிடம் பேச்சு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், 'கோர்ட் உத்தரவு பெற்று, விதிமுறைகளை பின்பற்றி தான் ஆரம்பகட்ட பணிகளை செய்கிறோம். உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் கோர்ட்டை நாடுங்கள். பணிகளை தடுக்க முடியாது' என, திட்டவட்டமாக கூறினர். மக்கள் எதிர்ப்பை மீறி பணிகள் துவங்கி, அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டன. பணிகளை தடுக்க முயன்ற, 30க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, இடுவாய் கிராமத்தில் இன்று கடையடைப்பு நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

