/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரையை மாற்ற மக்கள் கோரிக்கை
/
நிழற்கூரையை மாற்ற மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2025 09:57 PM
உடுமலை ; உடுமலை நகர பஸ் ஸ்டாப்களில், பெயரளவில் இருக்கும் நிழற்கூரைகளை பயனுள்ள வகையில் மாற்ற வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வதற்கும் பஸ்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அப்போது பஸ்சுக்கு காத்திருக்கும் போது, அவர்களுக்கு நிழற்கூரைகள் பெருமளவில் உதவுகிறது.
அவ்வகையில், உடுமலை நகர பஸ் ஸ்டாப்களில், எம்.பி., நிதியின் கீழ் பல்வேறு பகுதிகளில் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, தாராபுரம் ரோடு, தளிரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரே மாதிரியான ஸ்டீல் இருக்கைகள் மற்றும் மேற்கூரை கொண்ட நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழற்கூரைகளில் பொதுமக்கள் அமர்வதற்கு, போதுமான இருக்கை வசதிகளும் இல்லை.
மேலும் அதில் மேற்கூரைகள் அதிக உயரத்துடன் இருப்பதால் வெயில், மழை என எந்த காலநிலைக்கும் பயன்படும் வகையிலும் இல்லை. மழை நாட்களில் மழைநீர் முழுவதும் நிழற்கூரையில் வரும் வகையில் தான் உள்ளது.
கோடை காலங்களிலும் நிழலாக இருப்பதில்லை.இவ்வாறு எந்த பயனும் இல்லாத நிழற்கூரைகளால், பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர். அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்தால் நிற்பதற்கும் இடவசதி இல்லை.
இத்தகைய நிழற்கூரைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அவற்றை மாற்றி அமைக்க வேண்டுமென நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதில், மாநில அரசும் தலையிட்டு இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.