/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 13, 2024 07:22 AM

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், உடுமலை நகரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அரசு பஸ் போக்குவரத்தை நம்பியே உள்ளனர்.
ஆனால், உடுமலையிலிருந்து, கொழுமம், சாளரப்பட்டி, மருள்பட்டி, மடத்துக்குளம், காரத்தொழுவு, கடத்துார், கொமரலிங்கம், அமராவதி, தளி, தேவனுார் புதுார், வாளவாடி, கல்லாபுரம் என பல்வேறு வழித்தடங்கள் மற்றும், குடிமங்கலம் வட்டார கிராமங்கள் என பெரும்பாலான கிராமங்களின் மக்கள் தொகை பெருக்கம், பொது போக்குவரத்து அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, போதிய அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. அதிலும், கடைக்கோடியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு, பஸ் வசதியே இல்லாத சூழலும் உள்ளது.
குறைந்த அளவில் இயக்கப்படும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பள்ளி நேரங்களில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் வழித்தடங்களில், போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போல், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
எனவே, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தவும், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில், புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.