/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேதமான பஸ் ஸ்டாண்ட் நடைபாதை சாக்கடைக்குள் விழும் மக்கள்
/
சேதமான பஸ் ஸ்டாண்ட் நடைபாதை சாக்கடைக்குள் விழும் மக்கள்
சேதமான பஸ் ஸ்டாண்ட் நடைபாதை சாக்கடைக்குள் விழும் மக்கள்
சேதமான பஸ் ஸ்டாண்ட் நடைபாதை சாக்கடைக்குள் விழும் மக்கள்
ADDED : ஏப் 10, 2025 10:22 PM

உடுமலை,; உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மழை நீர் வடிகால் மீது அமைக்கப்பட்ட நடை பாதை பல இடங்களில் உடைந்துள்ளதால், பொதுமக்கள் உள்ளே விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு தினமும், 300க்கும் மேற்பட்ட பஸ்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் பயணியர், நடந்து செல்லும் வகையில், பைபாஸ் ரோட்டில், சி.டி.சி., பணிமனை முதல், ரவுண்டானா வரை, மழை நீர் வடிகால் மீது, கான்கிரீட் அமைத்து, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மழை நீர் வடிகாலில், பெரும்பாலும் சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில், நடை பாதை பல இடங்களில் சிதிலமடைந்தும், ஓட்டை விழுந்தும் காணப்படுகிறது.
இதில் நடந்து வரும், பொதுமக்கள், குழந்தைகள் தவறி, மிக ஆழமாக உள்ள சாக்கடை கால்வாயில் விழும் சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது.
அதிலும், இரவு நேரங்களில் போதிய விளக்கு வசதியில்லாததால், அடிக்கடி பொதுமக்கள் விழுத்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், மது போதை ஆசாமிகள் பலர் உள்ளே விழுந்து இறக்கும் சம்பங்களும் நடந்து வருகிறது.
எனவே, பஸ் ஸ்டாண்ட் நடை பாதையை உடனடியாக புதுப்பிக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

