/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் முதலை 'உலா' மக்கள், விவசாயிகள் அதிர்ச்சி
/
ரோட்டில் முதலை 'உலா' மக்கள், விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : மார் 15, 2024 12:25 AM

உடுமலை';உடுமலை அருகே, பிரதான ரோட்டில் முதலை உலா வந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடுமலை அருகே, திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையான, கொழுமம் கிராமத்தில் அமராவதி ஆறு மற்றும் குதிரையாறு இணையும் பகுதி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, இங்குள்ள போலீஸ் செக்போஸ்ட் அருகே, முதலை ஒன்று ரோட்டில் உலா வந்துள்ளது. கிராமம், விவசாயம் உள்ள பகுதியில், பெரிய அளவிலான முதலை உலா வந்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலையை பிடிக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.
அமராவதி வனத்துறையினர் கூறுகையில், 'முதலை சுற்றி வந்தது குறித்து பொதுமக்கள் புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள், ஆற்றில், வாய்க்காலில் குளிக்கும் போது, அல்லது விவசாய தோட்டங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

