தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குரங்குகளுக்கு உணவளிக்கும் மக்கள்: பாதிப்பை தவிர்க்க மனு

குரங்குகளுக்கு உணவளிக்கும் மக்கள்: பாதிப்பை தவிர்க்க மனு

குரங்குகளுக்கு உணவளிக்கும் மக்கள்: பாதிப்பை தவிர்க்க மனு


UPDATED : அக் 21, 2026 04:50 PM

ADDED : அக் 21, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:50 PM ADDED : அக் 21, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: திருமூர்த்திமலையில், குரங்குகளுக்கு மக்கள் உணவளிப்பதை தவிர்க்க அறிவிப்பு பலகைகள் வைத்து, கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மனு அனுப்பியுள்ளனர்.

உடுமலை திருமூர்த்திமலை ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. அடிவாரத்திலுள்ள கோவில் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர், அவற்றுக்கு பல்வேறு உணவுகளை வழங்குகின்றனர்.

இந்த நடைமுறைக்கு பழகிய குரங்குகள், அவ்வழியாக செல்லும் மக்களிடம் பொருட்களை பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால், அச்சமடைந்து அவற்றை விரட்டும் போது, அவை மக்களை தாக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகியுள்ளது.

இது குறித்து ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரமணன் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறையினருக்கு அனுப்பியுள்ள மனு:

திருமூர்த்திமலை கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.

அவை உணவுப் பொருட்களைப் பறிப்பது மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

அவற்றிற்கு உணவளிப்பதைத் தவிர்க்க அறிவிப்புப் பலகைகள் அமைத்து, உணவுக் கழிவுகள் முறையாக அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், வனவிலங்கு நிபுணர்களின் ஆலோசனையுடன் உரிய மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் பாதுகாப்பும், வனவிலங்குகளின் நலனும், ஒருசேரப் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us