ADDED : ஆக 31, 2025 12:49 AM

பெருமாநல்லுார் : -மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பெருமா நல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமினை, மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினர். முகாமில், பல்வேறு மருத்துவ துறை மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.
தேவைப்படுவோருக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டஅனைத்து வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, உதவித்தொகை வழங்க பதிவு செய்யப்பட்டது.
பெருமாநல்லுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று உடல் பரிசோதனைசெய்து கொண்டனர்.

