/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை காய்கறி விலை மக்கள் அறிவதில் சிக்கல்
/
உழவர் சந்தை காய்கறி விலை மக்கள் அறிவதில் சிக்கல்
ADDED : ஜன 26, 2025 03:35 AM

திருப்பூர்: உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம் குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக வைக்கப்பட்டிருந்த 'டிஸ்பிளே' பழுதாகியுள்ளதால், காய்கறி விலை என்ன என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தையில் அன்றாட காய்கறிகள் விலை நிலவரத்தை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள 'எலக்ட்ரிக்கல் டிஸ்பிளே' உழவர் சந்தை அலுவலர் அறை முன் நிறுவப்பட்டது. இதில் தினசரி தக்காளி, காய்கறி, கீரை, பழங்கள் விலை என்ன என்ற விபரம் ஒளிபரப்பாகும்.
வார விடுமுறை, விசேஷ தினங்களில் வரும் வாடிக்கையாளர்கள் பார்த்து அறிந்து கொள்வதுடன், விலைக்கு ஏற்ப திட்டமிட்டு பொருட்களை வாங்கிக்கொள்வர். இந்த டிஸ்பிளே பழுதாகி ஒரு மாதமாகிறது. முகப்பு பகுதி கும்மிருட்டில் உள்ளது; சரிசெய்யவில்லை. இதனால், அன்றாட விலை நிலவரத்தை சந்தைக்கு வரும் வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

