/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கும் திட்டம் அரசின் முடிவை கண்டித்து மக்கள் போராட்டம்
/
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கும் திட்டம் அரசின் முடிவை கண்டித்து மக்கள் போராட்டம்
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கும் திட்டம் அரசின் முடிவை கண்டித்து மக்கள் போராட்டம்
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கும் திட்டம் அரசின் முடிவை கண்டித்து மக்கள் போராட்டம்
ADDED : ஜன 07, 2025 02:13 AM
உடுமலை; உடுமலை நகராட்சியுடன், பெரிய கோட்டை ஊராட்சியை மட்டும் இணைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடந்தது.
உடுமலை நகராட்சியுடன், அருகிலுள்ள கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி உள்ளிட்ட, 14 ஊராட்சிகளை இணைக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பெரும்பாலான ஊராட்சிகளிலும் இணைக்க அனுமதியளித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், உடுமலை நகராட்சியுடன், பெரிய கோட்டை ஊராட்சியை மட்டும் இணைத்து, அரசு அறிவிப்பு வெளியிட்டது.
நகரின் மூன்று எல்லையாகவும், நகரை ஒட்டியே உள்ளதோடு, கோட்டாட்சியர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ., என அரசு அலுவலகங்கள் நகருக்கு மிக அருகிலுள்ள கணக்கம்பாளையம், போடிபட்டி, கண்ணமநாயக்கனுார், சின்னவீரம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்காததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், நகராட்சியுடன் பெரிய கோட்டை ஊராட்சியை மட்டும் இணைத்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய கம்யூ., சார்பில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோடு மறியல் போராட்டம் நடந்தது.
மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் அப்பாஸ், தெய்வகுமார், நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு மிக அருகில், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என வருவாய் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகளை அரசியல் காரணங்களினால் இணைக்காமல், பெரும்பாலான பகுதிகள் கிராமமாகவும், விவசாய நிலங்களை கொண்டதாகவும் உள்ள பெரிய கோட்டை ஊராட்சி இணைக்கப்பட்டுள்ளது.
அதே போல், 50 சதவீதத்திற்கும் மேல், ஏழை மக்கள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஆதாரமாகக்கொண்டு மக்கள் வசிப்பதோடு, குடிசை பகுதிகளே அதிகளவு உள்ளது.
நகராட்சியுடன் இணைத்தால், நுாறு நாள் வேலை பறிபோவதோடு, வரி இனங்களும் அதிகரித்து, மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, பெரிய கோட்டை ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்கக்கூடாது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
பொதுமக்கள் போராட்டத்தையடுத்து, தாசில்தார் விவேகானந்தன், டி.எஸ்.பி., ஆறுமுகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.