/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்; போராட்டம் நடத்த திட்டம்
/
தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்; போராட்டம் நடத்த திட்டம்
தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்; போராட்டம் நடத்த திட்டம்
தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்; போராட்டம் நடத்த திட்டம்
ADDED : நவ 15, 2025 01:11 AM

பல்லடம்: பல்லடம் நகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட நன்னா சாஹிப் வீதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும்; அதுவும் சரிவர வினியோகிப்பது இல்லை என்றும், இப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அப்பகுதி பெண்கள் கூறியதாவது:
சமீப நாட்களாக, எங்கள் பகுதியில் குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும். அதுவும் அரைகுறையாகத்தான் வருகிறது. சிலரது வீடுகளில் உள்ள குழாய்களில் காற்று கூட வருவதில்லை.
கேட்டால், குடிநீர் டேங்கில் ஏறுவதில்லை என்கின்றனர். இத்தனை நாட்களாக ஏறிக் கொண்டிருந்த குடிநீர் திடீரென ஏறாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதேபோல், நன்றாக இருந்த கழிவுநீர் கால்வாயை தோண்டி, புதுப்பிப்பதாக கூறி அரைகுறையாக வேலை பார்த்துள்ளனர்.
ஏற்கனவே குறுகலாக உள்ள இந்த ரோட்டின் அகலம் மேலும் குறைந்துவிட்டது. இத்துடன், குடிநீர் குழாய்களை உடைத்து விட்டு, அதையும் அரைகுறையாக பொருத்தி சென்றுள்ளனர். 15 நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதால், விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சப்பை தண்ணீரும் வருவதில்லை.
ரோடு குறுகலாக இருப்பதால் லாரி தண்ணீரும் உள்ளே வருவதில்லை. குடிநீருக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகிறோம். இப்பிரச்னைகளை சரி செய்யாவிட்டால், சாலைமறியலில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

