/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தான கிளைகளை அகற்றுங்க நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
/
ஆபத்தான கிளைகளை அகற்றுங்க நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
ஆபத்தான கிளைகளை அகற்றுங்க நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
ஆபத்தான கிளைகளை அகற்றுங்க நகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 29, 2025 11:31 PM

உடுமலை; ரோட்டோரத்தில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ள, மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் மழையை விடவும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.
இதனால் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் சாய்ந்து விழும் சூழல் தான் தற்போது உள்ளது.
உடுமலை நகரின் குடியிருப்பு பகுதிகளில், ரோட்டோரங்களில் புங்கன், வேம்பு உட்பட பல்வேறு மரங்கள் உள்ளன. தற்போது மழை பெய்து வரும் நிலையில், பலரும் மழைக்கு மரங்களின் கீழ் ஒதுங்குகின்றனர். ஆனால் அதுவே ஆபத்தாகவும் மாறியுள்ளது.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அடர்ந்த் மரங்களின் கிளைகள் வெகுவாக சாய்ந்து கிழே விழும் நிலையில் தொங்குகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சுறுத்தலுடன்தான் கடந்து செல்கின்றனர்.
சில பகுதிகளில் மின் கம்பங்கள் மரங்களின் அருகில் இருப்பதால் மின் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, நகரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.