/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசம் குறித்தது 'வந்தே மாதரம்' பாடல் புரிதல் இல்லாதவர்களால் பிரச்னை; பா.ஜ. ராம சீனிவாசன் பேச்சு
/
தேசம் குறித்தது 'வந்தே மாதரம்' பாடல் புரிதல் இல்லாதவர்களால் பிரச்னை; பா.ஜ. ராம சீனிவாசன் பேச்சு
தேசம் குறித்தது 'வந்தே மாதரம்' பாடல் புரிதல் இல்லாதவர்களால் பிரச்னை; பா.ஜ. ராம சீனிவாசன் பேச்சு
தேசம் குறித்தது 'வந்தே மாதரம்' பாடல் புரிதல் இல்லாதவர்களால் பிரச்னை; பா.ஜ. ராம சீனிவாசன் பேச்சு
ADDED : டிச 12, 2025 07:13 AM

திருப்பூர்: திருப்பூர் தேசிய சிந்தனை பேரவை சார்பில், வந்தே மாதரம் பாடலின், 150ம் ஆண்டு கொண்டாட்டம்; பாரதியார் பிறந்த நாள் விழாவையொட்டி 'வந்தே மாதரமும், பாரதியும்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் திருப்பூரில் நேற்று மாலை நடந்தது.
இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசியதாவது:
இன்றைக்கு டில்லியில் 'வந்தே மாதரம்' பாடலும், தமிழகத்தில் திருப்பரங்குன்றமும் 'துாள்' கிளப்பி கொண்டிருக்கின்றன. வெளிப்படையாக பார்க்கும் போது, இரண்டுக்கு தொடர்பு இல்லாதத போல் இருக்கும். ஆனால், இரண்டுக்கும் ஒற்றுமை உள்ளது. 'வந்தே மாதரம்' என்ற சொல்லுக்கு, 'தாயை வணங்குவோம்' என்று பொருள். இந்த பாடலை அனைவரும் எதிர்க்கின்றனர். இதன் பின்னணியில் நாம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டில், தேசத்தை பற்றிய புரிதல் தவறாக உள்ளது. தேசியம் உருவாக நிலப்பரப்பு, மண்ணை நேசிக்க கூடிய மக்கள் இருக்க வேண்டும். இரண்டுடன் சேர்ந்து மதிப்பீடும் இருக்க வேண்டும். நாட்டின் எல்லை வரையறை சட்டத்தால் தீர்மானிக்கப்படவில்லை; ஆன்மிகத்தால் கட்டமைக்கப்பட்டது.
மதம், மொழியை வைத்து நாடு உருவாகவில்லை. மதம் வேறு; தேசம் வேறு. ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமான நாடு இது. முதல் தரமான தேசியவாதி, அம்பேத்கர் தான். நாட்டின் புரிதல் குறித்து இல்லாமல் இருப்பதால் தான், தற்போது 'வந்தே மாதரம்' பாடலுக்கு பிரச்னை. இந்த பாடல் தேசத்தை பற்றியது என்று புரிய வைத்திருக்க வேண்டும்.
பாரதியார், தான் வாழ்ந்த காலத்தில் தேசத்தை சுமந்தார். இன்றைக்கு, அவரை சுமக்கிறோம். அனைத்து கவிதைகளையும் பாரதி மூலம் பராசக்தி எழுதினார். ஆணும், பெண்ணும் சமம் என்று, சொன்னவர் பாரதி. இன்றைக்கு பாரதி வசித்த வீடு, சிதிலமடைந்து உள்ளது. அதை சரி செய்ய அரசும் முன்வரவில்லை. அதை சரி செய்ய அனுமதியும் தராமல், இந்த அரசு 'ஈகோ' பார்க்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

