sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீர்வுகளை தேடி குறைகளை கொட்டித் தீர்த்த மக்கள்!

/

தீர்வுகளை தேடி குறைகளை கொட்டித் தீர்த்த மக்கள்!

தீர்வுகளை தேடி குறைகளை கொட்டித் தீர்த்த மக்கள்!

தீர்வுகளை தேடி குறைகளை கொட்டித் தீர்த்த மக்கள்!


ADDED : மார் 18, 2025 04:12 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெற்றுவரும் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள், கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்துவருகின்றனர். நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 533 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டி மனு அளித்தனர்.

சின்னக்காம்பாளையம் பகுதி பொதுமக்கள்:

தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையம் கிராமத்தில் செயல்படும் கோழிப்பண்ணையால், குடியிருப்பு பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இரவு நேரங்களில், கடும் துர்நாற்றம், கோழிகளின் சத்தத்தால், துாங்க முடியாமல் தவிக்கிறோம். ஈக்கள் தொல்லையால், மாடுகளில் பால் கறக்க முடிவதில்லை. இதனால், எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டநிலையில், பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடத்தப்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவரும் பண்ணையை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ப.வடுகபாளையம் பகுதி பொதுமக்கள்:

பல்லடம் நகராட்சி நிர்வாகம், வடுகபாளையத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம், பூமி பூஜை நடைபெற்ற போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கூடாது என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். குடிநீர் தட்டுப்பாடு, பள்ளிக்கு போதிய கட்டட வசதி இல்லை, ரேஷன் கடை இல்லாமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருகிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தால், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்; நோய் பாதிப்பு அபாயமும் உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கூடாது.

பல்லடம் ஒன்றிய மா.கம்யூ.,:

பல்லடம் ஒன்றியம், பூமலுார் ஊராட்சி, மேட்டுப்பாளையத்தில், 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அத்திக்கடவு குடிநீர், 25 நாட்களுக்கு ஒருமுறையே வினியோகிக்கப்படுவதால், மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேல்நிலை தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகிக்காமல், குளறுபடி நடக்கிறது. தண்ணீர் பிடிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, தடையின்றி குடிநீர் வினியோகிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்:

பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகம், 2009 முதல் 2024ம் ஆண்டு வரை, மூன்று முறை சாமளாபுரத்திலிருந்து கொண்டுவந்த தண்ணீரால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது மீண்டும் சாமளாபுரம் குளம் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து, ரசாயனம் கலந்த தண்ணீரை இச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள குளங்களில் நிரப்ப சிலர் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வாறு நிரப்பினால், கிணறு, ஆழ்துணை கிணற்று நீர் உப்பாக மாறிவிடும். விவசாயம் பாதிக்கப்படும். கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். மக்களுக்கு நோய் பாதிப்பு அபாயமும் உள்ளது. எனவே, சாமளாபுரம் குளம் பகுதியிலிருந்து இச்சிப்பட்டிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கைவிட வேண்டும். இதற்கு மாறாக, பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து, நல்ல தண்ணீரை குட்டைகளுக்கு கொண்டுவரும் வகையிலான திட்டங்கள் வகுக்கலாம்.






      Dinamalar
      Follow us