/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட வேலியை சிதைக்கும் மக்கள்; இதுவா 'பொறுப்புணர்வு'
/
குப்பை கொட்ட வேலியை சிதைக்கும் மக்கள்; இதுவா 'பொறுப்புணர்வு'
குப்பை கொட்ட வேலியை சிதைக்கும் மக்கள்; இதுவா 'பொறுப்புணர்வு'
குப்பை கொட்ட வேலியை சிதைக்கும் மக்கள்; இதுவா 'பொறுப்புணர்வு'
ADDED : மே 31, 2025 05:14 AM

திருப்பூர்; நீர்நிலைகளில், பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்க அமைக்கப்பட்ட வேலியை சிதைத்து, நீர்நிலைக்குள் குப்பைக் கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரின் மையப்பகுதியில் ஓடும் நொய்யல் ஆற்றில், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இந்த ஆற்றில் சாயக்கழிவுநீர் மற்றும் ஆற்றையொட்டிய குடியி ருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து மாசுபட்டிருக்கிறது.
'நொய்யல் நதியை சுத்தம் செய்ய வேண்டும்; நன்னீர் ஓடும் ஆறாக மாற்ற வேண்டும்' என்ற எதிர்பார்ப்பும், கோரிக்கையும் ஒருபுறம் வலுத்து வருகிறது. சில தன்னார்வ அமைப்பினர் நொய்யல் நதியில், நன்னீர் மட்டும் வழிந்தோடி செல்லும் வகையிலான நிலையை உருவாக்குவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், எல்லைக்குட்பட்ட நொய்யல் ஆற்றங்கரையையொட்டி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலி அமைத்து,ஆற்றில் யாரும் குப்பை கொட்டாத வகையிலான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.
அதோடு, நொய்யல் ஆற்றில் வீடுகளின் கழிவுநீர் கலப்பதை தவிர்க்க, பாதாள சாக்கடை கட்டுமானங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு, நீர்நிலையை மாசுபடாமல் பாதுகாக்க பலதரப்பினரும் முயற்சி செய்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் மீது சிறிதும் அக்கறையில்லாத சில குடியிருப்புவாசிகள், நிறுவனத்தினர், ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனத்தினர், வெளியேறும் கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்றுகின்றனர்.
நொய்யல் ஆற்றங்கரையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்ட தடுப்பு வேலியை சிதைத்து, கழிவுகளை அதுனுள் கொட்டும் வகையிலான ஏற்பாடுகளை கூட செய்து வைத்துள்ளனர்.
இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு இன்னல் கொடுப்போரை அடையாளம் கண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே, இத்தகைய பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.