sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீர்வுக்காக மக்கள் ஏக்கம்

/

தீர்வுக்காக மக்கள் ஏக்கம்

தீர்வுக்காக மக்கள் ஏக்கம்

தீர்வுக்காக மக்கள் ஏக்கம்


ADDED : அக் 08, 2024 12:39 AM

Google News

ADDED : அக் 08, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் பல்வேறு மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனர். அவர்கள் முகங்களில், பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஒளிர்ந்தது.

வலி பொறுக்க முடியாமல்

'ஹீமோபிலியா' பாதித்தோர்

அனுப்புநர்

'ஹீமோபிலியா' பாதிக்கப்பட்டோர்

திருப்பூர் மாவட்டம்

பொருள்: 'பேக்டர்' மருந்து தட்டுப்பாடு போக்குதல்.

ஐயா

திருப்பூர் மாவட்டத்தில் ஹீமோபிலியா எனும் ரத்த உறைதல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர், 70 பேர் உள்ளனர். இக்குறைபாட்டுக்கு, 'பேக்டர்' எனப்படும் ஐந்து வகை உறைகாரணி செலுத்தப்படுகிறது. இவற்றில், 'பேக்டர் -7' மற்றும் 'பேக்டர் -9' ஆகிய மருந்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நான்கு மாதங்களாக இருப்பு இல்லை.

டபிள்யு. வி.வி., 15 நாட்களாக இருப்பு இல்லை. தற்போது, 'பேக்டர் -8' மட்டுமே இருப்பு உள்ளது. அத்தியாவசியமான மருந்து இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் கடும் மனவேதனையுடன் உள்ளனர். உயிர்காக்கும் மருந்து என்பதால், ஐந்து வகையான 'பேக்டர்' மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

'வருமுன் காப்போம்' திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற ஹீமோபிலியா நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. ரத்தகசிவு ஏற்பட்டால், மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. வலி, வேதனையுடன் பயணம் செய்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

நன்றி.

-----

பலி வாங்க காத்திருக்கும்

பெரிய கால்வாய்கள்

அனுப்புநர்

ரவி

இணைச்செயலாளர்

'கன்ஸ்யூமர் அவேர்னஸ் விங்'

பொருள்: கால்வாய்கள் காவு வாங்கும் அபாயம்

ஐயா

மாநகராட்சி பகுதியில் உள்ள பெரிய சாக்கடை கால்வாய்களுக்கு முறையான தடுப்பு வசதியில்லை. அதிக மழை பெய்தால், சாக்கடை கால்வாயில் விழுந்து உயிர்பலி ஏற்படுகிறது. விமானப்படை முன்னாள் அலுவலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய கால்வாய்களுக்கு, பக்கத்தடுப்பு அமைத்து, பேரிடர் மேலாண்மை குழு வாயிலாக, அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில், தனியார் அமைப்புகளுக்கு, அறை ஒதுக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசு கட்டடத்தில், தனி அமைப்புகளுக்கு இடம் ஒதுக்க வேண்டாம்.

நன்றி.

----

மதுக்கடையால்

தினமும் சண்டை

அனுப்புநர்

பொதுமக்கள்

அமர்ஜோதி லே அவுட்

வெங்கடாசலபுரம் கே.சி.எம்., லே அவுட்

பூச்சக்காடு

மங்கலம் ரோடு

திருப்பூர்

பொருள்: மதுக்கடையை இடம் மாற்றக் கோருதல்

ஐயா

எங்கள் பகுதியில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. மங்கலம் ரோடு பகுதியில் மதுக்கடை(எண்:1932) இயங்குகிறது. மது குடிக்க வருபவர்கள், வீட்டின் முன் வாகனங்களை நிறுத்துகின்றனர்; சிறுநீர் கழிக்கின்றனர். அடிக்கடி, கண்ணாடி பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இதை கண்டிக்கும் போது, தினமும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பகல் - இரவாக, மது வியாபாரம் நடப்பதால், பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதால், மதுக்கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

நன்றி.

-----------------

மாற்றுத்திறனாளியிடம்

அரசு வேலை மோசடி

அனுப்புநர்

மகாராஜன்

குமரானந்தபுரம்

பொருள்: அரசு வேலை மோசடி

ஐயா

பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்; மாற்றுத்திறனாளியான நான் ஜன., மாதம் வேலை வாய்ப்பு முகாமில், வேலைக்காக மனு கொடுத்தேன். பிறகு, சென்னையில் இருந்து பேசுவதாக கூறி, அரசு வேலை தயாராகிவிட்டதாக கூறி, 60 ஆயிரம் ரூபாய் கேட்டார். கோவை கலெக்டர் அலுவலகம் வரவழைத்து, எனது பணி நியமன ஆணை என்பதை காண்பித்து, தவணை முறையில், 70 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார். பிறகு, மொபைல்போன் தொடர்பை துண்டித்தார். என்னை ஏமாற்றி, பணம் பறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்

நன்றி.

இலக்கியமான கடிதங்கள்

கடித இலக்கியம் கட்டுரை, நாட்குறிப்பு, நெடுங்கதை, விளக்கக் கதைகள், சிறுகதை, நாடகம், துணுக்குகள் என பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அரசியல், சமூகம், இலக்கியம், கலை, நாடு, இனம், மொழி, பண்பாடு போன்ற கருத்தியல்களையும் சேர்த்து பிணைந்தவாறு இது அமைந்தது. அன்பும், பண்பும், அறிவும், தெளிவும், அதற்கேற்ற சொல் திறமும், வெளிப்பாட்டு முறையும் கடிதங்களுக்கு அழகு சேர்த்தன. இவ்வாறு இலக்கியமாக மாறிய கடிதங்கள் பல.''ஒரு கதையோ, கட்டுரையோ எழுதிய பின் அது ஒரு காட்சிப்பொருளாக - பரிசோதனைச் சாலையாக மாறிவிடுகிறது. எழுதும் வரை தான் அது கதை, கவிதை, கட்டுரை அப்பொழுதுதான் அது எழுத்தாளனுக்கு சொந்தமானது. அதன்பின் அது ஒரு பிரதி'' என்கிறார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.








      Dinamalar
      Follow us