/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் கூடுகிறது
/
மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் கூடுகிறது
ADDED : பிப் 20, 2025 05:51 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவில் வரும் மார்ச் 8ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், வரும் மார்ச் 8ம் தேதி, திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகம் மற்றும் அனைத்து தாலுகா அளவிலான கோர்ட்டுகளிலும், லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளும் விதமான சமரசம் ஏற்படுத்தக் கூடிய சிவில் வழக்குகள்; குடும்ப நல வழக்குகள்; வாகன விபத்து இழப்பீடு வழக்குகள்; சிறு குற்ற வழக்குகள்; செக் மோசடி, வங்கி வராக் கடன் வழக்குகள், நில மோசடி வழக்குகள் ஆகியவற்றில் விசாரித்து தீர்வு காணப்படும்.
நீண்ட நாள் நிலுவையில் உள்ள இது போன்ற வழக்குகள் மற்றும் இரு தரப்பும் சமரசத்துக்கு தயாராக உள்ள வழக்குகள் இதில் விசாரணைக்கு ஏற்கப்படும். வழக்குதாரர்கள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகி பயன் பெறலாம்.

