/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் நீதிமன்றம் 16 கைதிகள் விடுதலை
/
மக்கள் நீதிமன்றம் 16 கைதிகள் விடுதலை
ADDED : டிச 20, 2024 03:43 AM

திருப்பூர்; சிறை கைதிகளுக்காக நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம், 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவர் குணசேகரன் வழிகாட்டுதலின் பேரில், செயலாளர் ஷபீனா தலைமையின் கீழ், திருப்பூர் மாவட்ட சிறை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலை கிளை சிறைகளில் உள்ள கைதிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில், மாவட்டம் முழுவதும், 35 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 25 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நீதித்துறை நடுவர்கள் செந்தில்ராஜா, முருகேசன், உமாமகேஸ்வரி, சித்ரா, நித்யகலா மற்றும் லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.