/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகத்தடை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
வேகத்தடை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 18, 2026 05:23 AM

அவிநாசி: அவிநாசி அருகே கிராம சாலையில் அதிகளவில் விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் சார்பில், நெடுஞ்சாலைத்துறையிடம் மனு அளித்தனர்.
அவிநாசி ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் புது ஊஞ்சப்பாளையம் பிரிவு அருகே மூன்று ரோடுகள் சந்திக்கின்றன. இதில் ஒவ்வொரு ரோட்டில் இருந்தும் பிரதான ரோட்டிற்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு அருகில் வரும்வரை எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மேலும் நியூ திருப்பூர் பகுதிக்கு செல்லும் கம்பெனி வேன்கள் மற்றும் பஸ்கள் அதிக வேகத்தில் வருவதால் நடந்து செல்பவர்களுக்கும், டூவீலரில் வருபவர்களும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே. புது ஊஞ்சப்பாளையம் பிரிவில், வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

