sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு...  விருந்துக்கு 'தடா' விதிகளை கடைப்பிடிக்காவிடில் நடவடிக்கை

/

திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு...  விருந்துக்கு 'தடா' விதிகளை கடைப்பிடிக்காவிடில் நடவடிக்கை

திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு...  விருந்துக்கு 'தடா' விதிகளை கடைப்பிடிக்காவிடில் நடவடிக்கை

திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு...  விருந்துக்கு 'தடா' விதிகளை கடைப்பிடிக்காவிடில் நடவடிக்கை


ADDED : மார் 18, 2026 05:25 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதற்காக திருமண மண்டபங்கள் பயன்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், திருமண மண்டபம், தங்கும் விடுதி, அச்சகம், கேபிள் டிவி, பாத்திர கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன், திருமண மண்டபங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து பேசினார்.

மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தியதாவது:

* திருமண மண்டபங்களில் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சிகளில், அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றுடன் கூடிய பேனர்களை வைக்க அனுமதிக்க கூடாது.

* அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்து அளித்தல், பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மண்டபங்களை பயன்படுத்த இடம்கொடுக்ககூடாது.

* தேர்தல் முடியும்வரை, திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணம் உள்பட அனைத்துவகையான நிகழ்ச்சிகளுக்கு, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர், போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும்.

* வரும் நாட்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே மண்டபம் புக்கிங் செய்தோரும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும்.

* மண்டபங்களில் அன்னதானம் என்கிற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதிக்க கூடாது.

* விதிமுறைகளை மீறி, அரசியல் நிகழ்வுகளுக்கு அனுமதித்தால், மண்டப உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* துண்டுப்பிரசுரம், விளம்பர போஸ்டர்களில், கட்டாயம் அச்சகத்தின் பெயர், முகவரி விவரங்கள், வெளியிடுவோரின் விவரங்கள் தவறாமல் அச்சிடப்பட்டிருக்கவேண்டும். விளம்பரம், துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்ட 10 நகல்களை, வெளியிடுபவரின் உறுதிமொழியுடன், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, மூன்று நாட்களுக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

* தனிநபர்களை இழிவுபடுத்தும்வகையிலான பிரசுரங்களை அச்சிடக்கூடாது.

* விடுதியில் தங்கும் வாடிக்கையாளர்களின் விவரங்கள், உரிய ஆவணங்களின் நகலுடன் உரிய பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

* வேறு சட்டசபை தொகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கட்சியினர், பிரசாரத்துக்காக வந்தவர்கள், ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், அந்த சட்டசபை தொகுதியில் தங்கியிருக்ககூடாது.

* வாக்காளருக்கு, பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. பாத்திர கடை உரிமையாளர்கள், வாக்காளருக்கு பரிசு வழங்குவதற்காக அதிகளவில் கொள்முதல் செய்வோர் குறித்த விவரங்கள் தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

தகவல் அளிக்கவில்லையா... தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில், திருமண மண்டப உரிமையாளர்களே அதிகளவில் பங்கேற்றனர். கேபிள் டிவி, தங்கும் விடுதியினர் சிலர் மட்டுமே வந்திருந்தனர். அச்சகம், பாத்திரக்கடை உரிமையாளர்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. மாவட்ட தேர்தல் பிரிவிலிருந்து தகவல் அளிக்கப்படவில்லையா; அல்லது தகவல் அளித்தும், அந்த துறையினர் பங்கேற்கவில்லையான என்பது தெரியவில்லை.
மிகவும் முக்கியமான இத்தகைய தேர்தல் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரையும் பங்கேற்கச் செய்யவேண்டியதும்; போதிய வழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டியது தேர்தல் பிரிவினரின் கடமையாகிறது.



நடவடிக்கை பாயும்

கேபிள் டிவிகளில், அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்காக, ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றளிப்பு குழுவில் அனுமதி பெறவேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறும்வகையிலான ஒளிபரப்புகள் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - சதீஷ்குமார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்








      Dinamalar
      Follow us