/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் வினியோகம் சீரமைக்க மக்கள் மனு
/
குடிநீர் வினியோகம் சீரமைக்க மக்கள் மனு
ADDED : ஜூலை 18, 2025 11:30 PM
அவிநாசி; அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி தனி அலுவலரிடம், மா.கம்யூ., நிர்வாகிகள் அளித்த மனு:
நடுவச்சேரி ஊராட்சி, முதல் வார்டில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நான்கு நாட்களாக நல்ல தண்ணீர் குறித்த நேரத்தில் வருவதில்லை.
இதுதவிர, புது காலனியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக உப்பு தண்ணீர் வினியோகம் முறையாக இல்லை. இதனால், பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, ஆழ்துளை கிணற்றை சரி செய்து முறையான குடிநீர் வினியோகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
மனு அளிக்கும் நிகழ் வில், மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, கிளை செயலாளர் ராஜேஷ், முன்னாள் வார்டு உறுப்பினர் ரங்கசாமி, சுப்பிரமணி, சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.