/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் ஊடுபயிராக மிளகு; வழிகாட்டுதலுக்கு எதிர்பார்ப்பு
/
தென்னையில் ஊடுபயிராக மிளகு; வழிகாட்டுதலுக்கு எதிர்பார்ப்பு
தென்னையில் ஊடுபயிராக மிளகு; வழிகாட்டுதலுக்கு எதிர்பார்ப்பு
தென்னையில் ஊடுபயிராக மிளகு; வழிகாட்டுதலுக்கு எதிர்பார்ப்பு
ADDED : நவ 06, 2024 09:52 PM
உடுமலை ; தென்னையில், ஊடுபயிராக மிளகு பயிரிட வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காய்ப்புத்திறன் இழந்துள்ள மரங்களால், விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். இதை ஈடுசெய்யும் வகையில், வடகிழக்கு பருவமழைக்கு பிறகு தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, நிழல் அதிகமுள்ள தென்னந்தோப்புகளில், மிளகு சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட மிளகு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதில், கரிமுண்டா, கலுவல்லி, பாலன்கோட்டா, மல்லிக்காரா, பன்னியூர், 1, உட்பட கலப்பின ரகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
கேரளாவில் இருந்து 69 சதவீதம் மிளகு இந்தியாவுக்கு கிடைக்கிறது. கேரள விவசாய பல்கலை., யின் பன்னியூர், மிளகு ஆராய்ச்சி நிலையம் வாயிலாக, கலப்பின ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பன்னியூர் ரகங்கள் ஒரு ஹெக்டேருக்கு, 1,200 கிலோ முதல் 2,300 கிலோ வரை மகசூலை தரும் என தெரிவிக்கின்றனர். கேரளாவில், தோப்புகளில் ஒரு மரத்தின் மீது, 4 மிளகு கொடிகள் வளர்த்து, உயரே வளர செய்கின்றனர்.
இத்தகைய தொழில்நுட்பங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உடுமலை, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

