நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ; திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்கவும், போட்டிகளை சமாளிக்கவும், உற்பத்தி செலவை குறைப்பதுதான் சரியான பாணி என்கின்றனர் தொழில்துறையினர்.
திருப்பூர் சாய ஆலைகள், உற்பத்தி செலவு பல மடங்கு பெருகியதால் திக்குமுக்காடி வருகின்றன. குறிப்பாக, பொது சுத்திகரிப்பு நிலைய இயக்க செலவில், 45 சதவீதம் அளவுக்கு, மின் கட்டண செலவு ஏற்படுகிறது. சாய ஆலைகள் மட்டும் பெரும் தொகையை செலவிட்டு வருகிறது.குறிப்பாக, மின் கட்டண செலவை கணிசமாக குறைத்தால், தொழிலை காப்பாற்ற முடியும். அதற்காக, மரபுசாரா எரிசக்தி பயன்பாடு அதிகரிக்க வேண்டும்.
சோலார் அல்லது காற்றாலை மின்சார உற்பத்திக்கு, 85 சதவீத மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என, சாய ஆலைகள் எதிர்பார்க்கின்றன.