/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காகும் பெரியகுளம் கண்காணிப்பு அவசியம்
/
குப்பை கிடங்காகும் பெரியகுளம் கண்காணிப்பு அவசியம்
ADDED : அக் 29, 2025 12:08 AM

உடுமலை: முக்கிய நீராதாரமான பெரியகுளம் கரை குப்பை கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது; பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட பெரியகுளம் 404 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்தின் உபரி நீர் ஷட்டர், வாளவாடி பிரிவு சந்திப்பு அருகே அமைந்துள்ளது.
இந்த ஷட்டர் அருகில், பாசனத்துக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஷட்டர் பகுதியில், இறைச்சிக்கழிகள் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளும் சமீபகாலமாக கொட்டப்படுகிறது.
இதே நிலை நீடித்தால், குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். தண்ணீர் மாசடையும் வாய்ப்புள்ளது. இதே போல், குளத்து கரை முழுவதும் ஆங்காங்கே இரவு நேரங்களில் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர்.
பல்வேறு இடங்களில், 'குடி' மகன்கள் குடித்து விட்டு, காலி மதுபாட்டில்களை குளத்திலும், ஷட்டர்களிலும் வீசிச்செல்கின்றனர். கண்ணாடி துகள்கள் கால்களை பதம்பார்ப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித்துறை, போடிபட்டி ஊராட்சி நிர்வாகம், கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பு செய்ய வேண்டும்; குப்பை கொட்டுவதை தடுத்து, முக்கிய நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநில அரசும் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

