/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் நிரந்தர நெரிசல்; சிறப்பு திட்டம் தேவை
/
பழைய பஸ் ஸ்டாண்டில் நிரந்தர நெரிசல்; சிறப்பு திட்டம் தேவை
பழைய பஸ் ஸ்டாண்டில் நிரந்தர நெரிசல்; சிறப்பு திட்டம் தேவை
பழைய பஸ் ஸ்டாண்டில் நிரந்தர நெரிசல்; சிறப்பு திட்டம் தேவை
ADDED : பிப் 12, 2025 11:05 PM
உடுமலை; பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, விரிவான ரவுண்டானா அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் அமைக்கப்பட்டு, தளி ரோடு சந்திப்பில், தானியங்கி சிக்னல் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டின் அருகிலேயே தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பிரியும் பகுதி அமைந்துள்ளது.
முன்பு, மாநில நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஒரு வழிப்பாதை திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில், நகராட்சியால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பிறகு, மாநில நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலேயே தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன.
மேலும், தளி ரோடு சிக்னலில் இருந்து கிழக்கு நோக்கி வரும் வாகனங்கள், சென்டர்மீடியனை கடந்து, மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில், மேற்கு நோக்கி செல்ல வேண்டியுள்ளது.
அருகருகே இரு சந்திப்பு பகுதிகள், சென்டர்மீடியன், பஸ் நிறுத்தம் ஆகியவை அமைந்திருப்பதால், காலை, மாலை நேரங்களில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகலான இடத்தில், வாகனங்கள் திரும்ப முடியாமல், போக்குவரத்து ஸ்தம்பித்து விபத்துகள் ஏற்படுகிறது.
முன்பு, இந்த இடத்தில், விரிவான ரவுண்டானா அமைக்க நகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டு, பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
நகரில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான திட்டங்களை, துறைகளை ஒருங்கிணைத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

