/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் நிரந்தர நெரிசல் விதிமீறல்களால் தொடரும் சிரமம்
/
பிரதான ரோட்டில் நிரந்தர நெரிசல் விதிமீறல்களால் தொடரும் சிரமம்
பிரதான ரோட்டில் நிரந்தர நெரிசல் விதிமீறல்களால் தொடரும் சிரமம்
பிரதான ரோட்டில் நிரந்தர நெரிசல் விதிமீறல்களால் தொடரும் சிரமம்
ADDED : மார் 19, 2025 08:27 PM

உடுமலை, ; உடுமலை நகரின் பிரதான ரோட்டில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தவிர்க்க, 'பார்க்கிங்' விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக, பழநி ரோட்டில் இணையும் பை-பாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது.
நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், இவ்வழியாகவே தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வரை, வாகனங்களை ரோட்டோரத்தில் தாறுமாறாக நிறுத்திக்கொள்கின்றனர்.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே, காலை, மாலை நேரங்களில், அதிக நெரிசல் ஏற்படும் வகையில், வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். இதனால், ரோடு குறுகலாகி, வாகனங்கள் விலகிச்செல்ல வழியில்லாமல், விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்து போலீசார், ரோட்டோரத்தில் பார்க்கிங் கயிறுகளை அமைத்து, விதிமீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதான ரோட்டில், நெரிசலும், விபத்துகளும் தவிர்க்க முடியாததாகி விடும்.