/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி
ADDED : மே 17, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை பகுதிகளில், கன மழை பெய்ததால், நேற்றுமுன்தினம் மதியம் முதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
நேற்று வானம் தெளிவாக காணப்பட்டதோடு, அருவில் சீரான அளவில் நீர்கொட்டியதால், வழக்கம் போல் நேற்று காலை முதல் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். கோடை விடுமுறை காலம் என்பதால், அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்திருந்தனர்.