/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டரிடம் மனு
/
பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டரிடம் மனு
ADDED : நவ 22, 2024 12:13 AM
திருப்பூர்; 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ், நேற்று முன்தினம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் தங்கி, பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
அதில், சமூக ஆர்வலர்கள் சிலர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளும், குறித்த நேரத்தில் இயங்குவதை உறுதி செய்து, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்யவேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சி 52வது வார்டு, கே.எம்.ஜி., நகரில் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது.
மொத்தம் 90 சென்ட்டில், 69 சென்ட் இடத்தில் பூங்கா அமைந்துள்ளது. மீதமுள்ள, 21 சென்ட் பூங்கா நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். பூங்கா நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். வேலம்பட்டி சுங்கச்சாவடியில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
மாநகராட்சி, 43வது வார்டு, சூரியன் நகரில், பொது கழிப்பிடம் அருகே, உயரழுத்த மின்கம்பிகள், போதிய இடைவெளியின்றி, ஆபத்தான நிலையில் செல்கின்றன. இவற்றை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.