/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் தொழில் வளர்ச்சி துணை முதல்வரிடம் மனு
/
திருப்பூர் தொழில் வளர்ச்சி துணை முதல்வரிடம் மனு
ADDED : டிச 20, 2024 04:25 AM
திருப்பூர்; திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து தர வலியுறுத்தி, துணை முதல்வரிடம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூருக்கு நேற்று வருகை தந்த துணை முதல்வர் உதயநிதியை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் சக்திவேல் சந்தித்து, திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், பசுமை ஆற்றல் மானியம், நிட்வேர் போர்டு அமைத்தல், திருப்பூரில் ஏற்றுமதி மையம் மற்றும் பேப்ரிக் சோதனை மையங்களை நிறுவுதல், மினி டெக்ஸ்டைல் பார்க், எம்.எஸ்.எம்.இ., அல்லாதவர்களுக்கு ஏற்ற மானியங்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பஸ்களில் விதிக்கப்படும் சாலை வரி விலக்கு, தொழில்துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.