sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திடக்கழிவு முறைகேடு விசாரிக்க மனு

/

 திடக்கழிவு முறைகேடு விசாரிக்க மனு

 திடக்கழிவு முறைகேடு விசாரிக்க மனு

 திடக்கழிவு முறைகேடு விசாரிக்க மனு


ADDED : ஜன 28, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மங்கலம் ஊராட்சி கிராம சபா கூட்டம், சமுதாயக்கூடத்தில் நடந்தது. ஊராட்சியின் பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

த.வெ.க. வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் தலைமையில், அக்கட்சியினர் அளித்த மனுவில், 'மங்கலம் ஊராட்சியில், திடக் கழிவு மேலாண்மை திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளது.

மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பை, நொய்யல் ஆற்றோரமாக கொட்டப்படுகிறது. தினமும் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. குப்பை சேகரித்து அகற்றும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. விசாரணைக்குழு அமைத்து, விசாரணை நடத்த, கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.

l பெருமாநல்லுார் ஊராட்சியில் நடந்த கிராம சபாவில், வி.சி.க. நிர்வாகிகள் சார்பில் அளித்த மனுவில், 'பெருமாநல்லுார் ஊராட்சியில், ஐந்து மது பார்கள் உள்ளன.

இரவு, 10:00 மணிக்கு மூடாமல், 24 மணி நேரமும் விற்பனை நடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், தனியார் பார் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மதுபான கடைகளையும் முறைப்படுத்த வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us