/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிக்கு கழிப்பறை; பி.டி.ஓ.,விடம் மனு
/
பள்ளிக்கு கழிப்பறை; பி.டி.ஓ.,விடம் மனு
ADDED : ஜூலை 10, 2025 11:27 PM
பல்லடம்; பல்லடம் பி.டி.ஓ., பானுபிரியாவிடம், அறிவொளி நகர் அரசு துவக்கப்பள்ளி மேலாண்மை குழுவினர் அளித்த மனு:
அறிவொளி நகர் அரசு துவக்கப்பள்ளியில், 400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லை. ஏற்கனவே உள்ள இரண்டு கழிப்பறை சுகாதாரமற்ற நிலை உள்ளது. மேலும், வடக்கு பார்த்த வகுப்பறை கட்டடத்தின் தரைத்தளம் உடைந்துள்ளது. எனவே மாணவர்கள் இதில் அமர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தரைதளத்தை சீரமைத்து தர வேண்டும். பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட பி.டி.ஓ., பானுப்பிரியா, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.