/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் வீதி ஆக்கிரமிப்பு அகற்ற மனு
/
நொய்யல் வீதி ஆக்கிரமிப்பு அகற்ற மனு
ADDED : மார் 18, 2025 04:01 AM

திருப்பூர், : இந்திய தேசிய லீக் கட்சி திருப்பூர் மாவட்ட தலைவர் அஸ்லம் தலைமையில் அக்கட்சியினர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தனர்.
இது குறித்து, இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் அஸ்லம் கூறியதாவது:
திருப்பூரில், பெரிய கடை வீதி, நொய்யல் வீதி பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகள், ரோட்டோர பகுதிகளை ஆக்கிரமித்து கூடாரம் போட்டுள்ளனர். பழனியம்மாள் பெண்கள் பள்ளி அமைந்துள்ள பெரிய கடை வீதியில், பிரியாணி கடைகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நொய்யல் வீதியில் இறைச்சி கடை நடத்துவோர், மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறுவை கூடங்களை பயன்படுத்துவதில்லை. அந்தந்த கடைகளிலேயே மாடுகளை அறுத்து, சுகாதாரமற்றவகையில் விற்பனை செய்கின்றனர்.
விதிமுறைகளை பின்பற்றாத இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரம் கடைபிடிக்காத கடைகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும். நொய்யல் வீதி, பெரிய கடை வீதிகளில் நடை பாதையை ஆக்கிரமித்துள்ள கூடாரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.