/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி; இழப்பீடு கேட்டு அமைச்சரிடம் மனு
/
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி; இழப்பீடு கேட்டு அமைச்சரிடம் மனு
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி; இழப்பீடு கேட்டு அமைச்சரிடம் மனு
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி; இழப்பீடு கேட்டு அமைச்சரிடம் மனு
ADDED : ஜன 19, 2025 12:33 AM

திருப்பூர் : தெருநாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, அமைச்சரிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
பி.ஏ.பி., காங்கயம், வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாசன சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நேற்று காங்கயத்தில் அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த மனு விவரம்:
ஆடு, மாடு, கோழி ஆகியன விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயம் பொய்த்து போனால், கால்நடை வளர்ப்பு தான் உதவியாக உள்ளது. சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் கால்நடைகளை தாக்குவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. கடந்தாண்டில் மட்டும் 500க்கு மேற்பட்ட கால்நடைகள்; 5,000க்கு மேற்பட்ட கோழிகள் இது போன்ற நாய்கள் தாக்கி இறந்துள்ளன. மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்த தீர்வும் இல்லை; ஊராட்சி நிர்வாகங்களும் கண்டு கொள்ளவில்லை.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிக்கல் நிலவுகிறது. இப்பிரச்னை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய சட்ட திருத்தம் செய்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்ற தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

