/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களுக்கு பட்டா அமைச்சரிடம் மனு
/
மக்களுக்கு பட்டா அமைச்சரிடம் மனு
ADDED : ஜூலை 30, 2025 10:27 PM
திருப்பூர்; திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் அளித்த மனு: பல்லடம் தாலுகா, நாரணாபுரம், அறிவொளி நகரில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். பல மாதங்களாக, பட்டா வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக, கலெக்டரிடம் விசாரித்த போது, அந்த இடம், மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் உள்ளது என தெரிய வருகிறது. மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் வீடுகட்டியுள்ள மொத்த இடத்துக்கு ஈடாக, உடுமலை தாலுகா, தளி கிராமத்தில், 17 ஏக்கர் பூமியை வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் கலெக்டரால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுதொடர்பான உரிய உத்தரவுகளை அவசர அவசியம் கருதி நில நிர்வாக ஆணையர் அவர்களுக்கு பரிந்துரைத்து, பட்டா வழங்க வேண்டும்.

